சுத்தி செய்த பவழக்கொடி..
..50 .. கிராம் அளவுக்கு..பூங்காவி செல்லத்தக்க அளவுக்கு.. நாட்டு கோழி முட்டை வெள்ளைக் கரு செல்லத்தக்க அளவுக்கு ..
செய்முறை ::
பூங்காவியைக் கல்வத்தில் போட்டு வெள்ளைக் கருவைச் சிறுகச் சிறுக வார்த்து இரண்டு மணி நேரம் அரைத்து ஒரு விரற்கன முள்ள இரண்டு அகல்கல் செய்து ஒரு அகலில் மேற்கண்ட பவழக்கொடியைப் பரப்பி மறு அகலால் மூடி அதன் மீது சீலைமண் மூன்று செய்து உலர்த்தி கவசத்தின் எடைக்கு ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் படியாக வராட்டியில் புடமிட்டு ஆறினை பின் எடுத்து கொண்டு அகலை பத்திரமாக
பிரித்து உள்ளே இருக்கும் மருந்தை எடுத்து கல்வத்தில் போட்டு எழுமிச்சம் பழச்சாற்றை சிறுகச் சிறுக விட்டு அரைத்து எடுத்து வில்லை தட்டி வெய்யிலில் காயவைத்து எடுத்து அகலில் வைத்து மேல் அகலால் மூடி வைத்து சீலைமண் மூன்று செய்து உலர்த்தி கவசத்தின் எடைக்கு ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் படியாக வராட்டியால் புடமிட்டு ஆறின பிறகு எடுத்து கல்வத்தில் போட்டு மருந்தை பட்டுபோல்
அரைத்து எடுத்துக் கொள்ளவும்..
மருந்து அளவு ::
..2..முதல்..3..அரிசி எடை
அளவுக்கு..
துணைமருந்து ::
தேன்,, திப்பிலி இரசாயனம்,,
தாளிசாதி சூரணம்,, முதலியவைகளாம்..
தீரும்நோய்கள் ::
நாட்பட்ட இருமல்,, இரத்த சயம்,,
இரத்தகாசம்,, இரத்தவாந்தி,,
நுரையீரல் புண்,, ஆகியவைகள் தீரும்..!!
Comments
Post a Comment