பீனிசம் மூக்கடைப்பு நோய்வகைகளும் மருத்துவமும் குறிகுணங்கள் :: மூக்கின் துளைகள் சிவந்து குருகுருத்துத் தும்மல் ஏற்படுதல்.. கண் சிவந்து காணப்படும்.. மூக்கினுல் அரிப்பெடுத்தல்.. நீர் வடிதல்.. தலை நோகுதல்.. அடிக்கடி மூக்கடைப்புடன் மூக்கைச் சிந்தல்.. சளி மற்றும் சீழ் வெளியாகுதல்.. மற்றும் திடீரெனக் குருதி கொட்டுதல்.. இயல்பாக இந்த நோய் வரும் வழிவகைகள் :: 1 ).. நன்கு கடுமையான வெயிலில் சென்று வந்தவுடன் குளிர்ந்த நீர் பருகுதல்.. 2 ).. உடல் ஒவ்வாமை (அலர்ஜி) உள்ள சூழலில் பணி செய்தல் (அல்லது) குளிர்ந்த காற்றில் பயணித்தது.. 3 ).. புகை மற்றும் வாசனையான திரவியங்களைப் பயன்படுத்துதல் அல்லது நுகர்தல்.. 4 ).. புழுதி படிந்த காற்றைச் சுவாசித்தல்.. 5 ).. தும்மலை உண்டு பண்ணும் பொருட்களை நுகர்தல்.. 6 ).. உடலானது கூடுதல் வெப்பநிலையில் உள்ள போது குளிர்ந்த நீரில் உடனே குளித்தல்.. 7 ).. ஐஸ்கிரிம் மற்றும் குளிர்பானம் ( பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பானங்கள் ) பருகுதல்.. 8 ).. குறைந்த நித்திரை கொள்ளுதல் 9 ).. முறையற்ற வாசியோகப் பயிற்சிகள்.. ஆரம்ப கறி குணங்கள் :: ஒரு வகையான எரிச்சலும், ந...
பெருங்காயம் பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான...