சுத்தி செய்த இரசம்,,
..100.. கிராம் அளவுக்கு..அரிதாரம்.. துருசு.. வெள்ளைப்பாடாணம்..
தொட்டிப் பாடாணம்.. இரசகற்பூரம்.. மிர்தார்சிங்கி.. சவ்வீரம் ..கெளரிப்பாடாணம்.. நெல்லிக்காய் கெந்தகம்..
இவைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே சுத்தி செய்தது
வகைக்கு பத்து கிராம் அளவுக்கு..
நவாச்சார ஜெயநீர்,,
செல்லத்தக்க அளவுக்கு..
சங்கத்திராவகம்,,
செல்லத்தக்க அளவுக்கு ..
செய்முறை ::
ஒவ்வொரு சரக்குகளையும் தனித்தனியே கல்வத்தில் போட்டு பொடித்து கொண்டு
பிறகு அனைத்து சரக்குகளையும் ஒன்றாக சேர்த்து கலந்து ஒரு மணிநேரம் அரைத்துக் கொண்டு பிறகு இதில் நவாச்சார ஜெயநீரை சிறுகச் சிறுக விட்டு இரண்டு சாமம் நேரம் அரைத்து எடுத்து செம்பால் ஆன பதங்கப் பாத்திரத்தில் போட்டு மேல் பாத்திரத்தால் மூடிவைத்து உலுந்து மாவால் சீலை மண் ஐந்து முறை சுற்றி வெய்யிலில் காயவைத்து எடுத்து அடுப்பில் ஏற்றி திபாகினியாக இரண்டு சாமமும் கமலாக்கினியாக இரண்டு சாமம் நேரமும் பிறகு
கடாக்கினியாக இரண்டு சாமம் நேரமும் எரித்து கொண்டு ஆறவைத்து கவசத்தை பிரித்து மேலேயுள்ள பாத்திரத்தில் இருக்கும் மருந்தையும் கீழே உள்ள பாத்திரத்தில் இருக்கும் மருந்தையும் சேர்த்து கல்வத்தில் போட்டு மேற்படி
சாரச் ஜெயநீரை சிறுகச் சிறுக விட்டு இரண்டு சாமம் நேரம் அரைத்து எடுத்து முன்போலவே பதங்கப் பாத்திரத்தில் போட்டு மேல் பாத்திரத்தால் மூடிவைத்து உலுந்து மாவால் சீலை மண் ஐந்து முறை சுற்றி வெய்யிலில் காயவைத்து எடுத்து அடுப்பில் ஏற்றி திபாகினியாக இரண்டு சாமமும் கமலாக்கினியாக இரண்டு சாமமும் கடாக்கினியாக இரண்டு சாமமும் எரித்து ஆறவைத்து கவசத்தை பிரித்து உள்ளே இருக்கும் மருந்தை எடுத்து கல்வத்தில் போட்டு முன்போலவே சாரச் ஜெயநீரை சிறுகச் சிறுக விட்டு இரண்டு சாமம் நேரம் அரைத்து எடுத்து பதங்கப் பாத்திரத்தில் போட்டு மேல் பாத்திரத்தால் மூடிவைத்து உலுந்து மாவால் சீலை மண் ஐந்து முறை சுற்றி வெய்யிலில் காயவைத்து எடுத்து அடுப்பில் ஏற்றி திபாகினியாக இரண்டு சாமமும் கமலாக்கினியாக இரண்டு சாமமும் கடாக்கினியாக இரண்டு சாமமும் எரித்து கொண்டு ஆறவைத்து கவசத்தினை பிரித்து உள்ளே இருக்கும் மருந்தை எடுத்து கல்வத்தில் போட்டு மூன்றாம் தடவையாக மீண்டும் முன்போலவே சாரச் ஜெயநீரை சிறுகச் சிறுக விட்டு இரண்டு சாமம் நேரம் அரைத்து எடுத்து பதங்கப் பாத்திரத்தில் போட்டு மேல் பாத்திரத்தால் மூடிவைத்து உலுந்து மாவால் சீலை மண் ஐந்து முறை சுற்றி வெய்யிலில் காயவைத்து எடுத்து அடுப்பில் ஏற்றி திபாகினியாக மூன்று சாமமும் கமலாக்கினியாக மூன்று சாமமும் கடாக்கினியாக மூன்று சாமமும் எரித்து ஆறவைத்து கவசத்தினை பிரித்து உள்ளே இருக்கும் மருந்தை எடுத்து கல்வத்தில் போட்டு இரண்டு
மணி நேரம் அரைத்து எடுத்து நாம் வழிபடும் கடவுளை வணங்கி விட்டு இந்த மருந்தை கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும் ..
மேற்கண்ட மருந்தில் பாதியாக பிரித்து ஒரு பகுதியை கல்வத்தில் போட்டு சங்கத் திராவகம் சிறுகச் சிறுக விட்டு ஒரு சாமம் நேரம் அரைத்து எடுத்து ஒரே வில்லையாக தட்டி வெய்யிலில் காயவைத்து எடுத்து செம்பால் செய்த அகலில் வைத்து மேல் அகலால் மூடிவைத்து சீலைமண் வலுவாக ஐந்து முறை சுற்றி வெய்யிலில் காயவைத்து எடுத்து கவசத்தின் எடைக்கு இரண்டு மடங்கு இருக்கும் படியாக வராட்டியால் புடமிட்டு எடுத்து ஆறவைத்து அதனை பிரித்து உள்ளே இருக்கும் மருந்தை எடுத்து கல்வத்தில் போட்டு பொடித்து ஒரு மணிநேரம் அரைத்து பிறகு மேற்படி திராவகத்தை சிறுகச் சிறுக விட்டு ஒரு சாமம் நேரம் அரைத்து எடுத்து வில்லை தட்டி வெய்யிலில் காயவைத்து எடுத்து முன்போலவே செம்பில் செய்த அகலில் வைத்து மேல் அகலால் மூடிவைத்து சீலைமண் வலுவாக ஐந்து முறை சுற்றி வெய்யிலில் காயவைத்து எடுத்து கவசத்தின் எடைக்கு
மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் படியாக வராட்டியால் புடமிட்டு எடுத்து ஆறவைத்து
கவசத்தினை பிரித்து உள்ளே இருக்கும் மருந்தை எடுத்து கல்வத்தில் போட்டு பொடித்து ஒரு மணிநேரம் அரைத்துக் கொண்டு பிறகு திராவகத்தை
சிறுகச் சிறுக விட்டு இரண்டு
சாமம் நேரம் அரைத்து எடுத்து
வில்லை தட்டி வெய்யிலில் காயவைத்து எடுத்து மேற்படி
அகலால் மூடிவைத்து சீலைமண் வலுவாக ஐந்து முறை சுற்றி வெய்யிலில் காயவைத்து எடுத்து கவசத்தின் எடைக்கு ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் படியாக வராட்டியால் புடமிட்டு எடுத்து ஆறவைத்து கவசத்தினை பிரித்து உள்ளே இருக்கும் மருந்தை எடுத்து கல்வத்தில் போட்டு இரண்டு
மணிநேரத்திற்கு குறையாமல்
அரைத்து எடுத்து நாம் வழிபடும் தெய்வங்கள் பிரார்த்தனை செய்து ஏழைகளுக்கு அன்னதானம்
செய்து இந்த மருந்தை உபயோகப் படுத்த வேண்டும்..
மருந்து அளவு ::
..1.. முதல்.. 2.. அரிசி எடை
அளவுக்கு மீறலாகாது ..
தீரும் நோய்கள் ::
எல்லாவகைக் கிரந்தி நோய்களும் தீரும்.. மேக சம்மந்தமான நோய்களும் தீரும்.. சூலைகள் அனைத்தும் தீரும்.. இன்னும்
அநேக விதமான நோய்களையும் குணப்படுத்தும்..!!
தீராது என்று கைவிடப்பட்ட
அனைத்து நோய்களுக்கும் இந்த மருந்தை கொடுத்து நோய்களை மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியும்..!!
ஐயா நான் இங்கே பதிவு செய்யும் மருந்துகள் ஒவ்வொன்றும் மருந்தை செய்யும் வல்லுநர்களின் கைபாகம் செய்பாகம் அனுபவம் போன்றவைகளை பொருத்து
தான் அமையும் ..!!
இதுபோன்றதொரு மருந்துகள்
ஒவ்வொன்றும் தனித்தனியே
பட்டை தீட்டிய வைரங்கள் ஆகும்,, மருந்து செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே
இதன் உண்மை புரியும்..!!
இங்கே ஒவ்வொரு மருந்துகளையும் வெட்ட வெளிச்சம் போட்டு பதிவு செய்தது போலவே இருக்கும்,,
ஆனாலும் அதனுள்ளே சில செயல்முறைகள் சூட்சுமங்களாக இருக்கும் நான் இங்கே பதிவு செய்யும் ஒவ்வொரு மருந்து முறைகளுக்கும் பாஷாண மருந்துகளை அதற்கு உண்டான நல்லதொரு வகையில் சுத்தி செய்ய வேண்டும்..!! பொதுவான மருந்து சுத்தி முறைகள் நாம்
எதிர்பார்க்கும் பலனை தராது
இதைப்பற்றிய உண்மைகளையும் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்,, மருத்துவத்திற்கு முதலில் ஒவ்வொரு மருந்திற்க்கும் ஆன சுத்தி முறைகள் அவசியம் அறிந்து இருக்க வேண்டும்..!!
பிறகு மருந்தின் சரியான எடை பாகம்,, அடுத்து
முறையான செய்பாகம்,, பக்குவமான கைபாகம்,, இல்லாததற்கு இலுப்பை பூ சர்க்கரை என்று சொல்லும் வார்த்தை,, இந்த
சித்தர்களின் முதன்மை மருத்துவத்திற்கு உதவாது..!!
அசல் தரமான சரக்கானதை
அனுபவத்தில் கண்டு இருக்க
வேண்டும்..!! அதனால் தான் நான் சொல்ல வருவது உங்களுக்கு இந்த மருந்து செய்முறையில் முன் அனுபவம் இருக்க வேண்டும் என்பதை...!!

Comments
Post a Comment