இலிங்கம் .. இரசம் .. வீரம் ..
பூரம் ..தாளகம் ..இந்த ஐந்து விதமான சரக்குகளையும் நன்றாக சுத்தி செய்து எடுத்துக் கொள்ளவும்
இவைகள் வகைக்கு ..
..50..கிராம் அளவுக்கு ..
சுத்தி செய்த கெந்தகம் ..
..150.. கிராம் அளவுக்கு ..
சுத்தி செய்த காந்தம் ..
..100.. கிராம் அளவுக்கு ..
கரு ஊமத்தை இலை சாறு
செல்லத் தக்க அளவுக்கு ..
சோற்றுக் கற்றாழை சாறு
செல்லத் தக்க அளவுக்கு ..
செய்முறை ::
முதலில் கெந்தகத்தை கல்வத்தில் போட்டு பொடித்து அதனுடன் இரசத்தை சேர்த்து அரைத்து நன்றாகக் கறுத்த பின்பு எடுத்து கொண்டு
தாளகத்தை கல்வத்தில் போட்டு பொடித்து அரைத்து இதனுடன் இரச கெந்தி கலவையை போட்டு ஒன்றுபட கலந்து அரைத்து தனியே வைத்துக் கொண்டு
இரசக்கற்பூரத்தை கல்வத்தில் போட்டு பொடித்து அரைத்து இதனுடன் வீரத்தை சேர்த்து அரைத்து எடுத்து கொண்டு
இலிங்கத்தை கல்வத்தில் போட்டு பொடித்து அரைத்து இதனுடன் வீரம் பூரம் சேர்ந்த
கலவையை போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொண்டு
இதனுடன் இரச கெந்தி கலவையை போட்டு ஒன்றுபட கலந்து நன்றாக அரைத்து இதனுடன் காந்தத் தூள் சேர்த்து கலந்து அரைத்து பிறகு இதில் கரு ஊமத்தை இலை சாற்றை சிறுகச் சிறுக விட்டு இரண்டு சாமம் நேரம் அரைத்து மருந்தை வழித்து ஒரு பீங்கான் தட்டில் போட்டு வெய்யிலில் காயவைத்து எடுத்து செந்தூரச் சட்டிக்குள் போட்டு மேல் சட்டியால் மூடி வைத்து சீலை மண் ஐந்து வெகு வலுவாய் செய்து உலர்த்தி எடுத்து அடுப்பில் வைத்து தீபாக்கினியாய் நான்கு சாமம் நேரம் எரித்துக் குளிரஆறியப் பின்பு பிரித்து மருந்தை எடுத்து கல்வத்தில் போட்டு பொடித்து கற்றாழை சாற்றை சிறுகச் சிறுக விட்டு இரண்டு சாமம் நேரம் அரைத்து மருந்தை வழித்து எடுத்து ஒரு பீங்கான் தட்டில் போட்டு வெய்யிலில் காயவைத்து எடுத்து மீண்டும்
செந்தூரச் சட்டிக்குள் போட்டு மேல் சட்டியால் மூடி வைத்து சீலை மண் ஐந்து வலுவாக
செய்து வெய்யிலில் வைத்து நன்றாக உலர்த்தி எடுத்து அடுப்பில் வைத்து கடாக்கினியாக நான்கு சாமம் நேரம் எரித்துக் குளிரஆறியப் பின்பு எடுத்து பிரித்து மருந்தை கல்வத்தில் போட்டு பொடித்து பட்டுப் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்..
மருந்து அளவு ::
தினமும் இரண்டு வேளைகள்
மட்டுமே தரவும் ..
..2.. அரிசி அளவு மட்டும்..
தீரும் நோய்கள் ::
மூன்று நாட்கள் மருந்தை
கொடுத்தால் ..
சன்னி ( 13 ) .. தீரும் ..
சுரம் ( 64 ) .. தீரும் ..
ஒரு வாரம் மருந்தை தந்தால்..
பவுத்திரம் ( 15 ) .. தீரும் ..
காசம் ( 5 ) .. தீரும் ..
வாதம் ( 80 ) .. தீரும் ..
இரண்டு வாரம் மருந்தை கொடுத்து வந்தால் ..
யோனிப் புற்று ..
மேக ரணங்கள் ..
லிங்கப் புற்று ..
முதலிய மஹா பயங்கரமான .
ரோகங்கள் குணப்படுத்தும் ..
இந்த மருந்தை முதல் முறை
செந்தூரச் சட்டியில் வைத்து எரித்து எடுத்து மருந்தை பாருங்கள் ஆச்சரியம் அடைவீர்கள் ..!!
Comments
Post a Comment