Skip to main content

உடல் இளைக்க

 ஓமம் - 100 கிராம்

சுக்கு - 100 கிராம்
மிளகு - 100 கிராம்
வாய்விளங்கம் - 100 கிராம்
பெருங்காயம் - 20 கிராம்
மலைப்பூண்டு - 200 கிராம்
கருப்பட்டி - 600 கிராம்

ஒவ்வொன்றையும் தனித்தனியே சுத்தி செய்துக் தூள் செய்து கொள்ள வேண்டும்.

கருபட்டியை தூள் செய்து உரலில் போட்டு, பூண்டு பருப்பை போட்டு சேர்த்து இடித்து, கடை சரக்குகளை ஒவ்வொன்றாக போட்டு மர உலக்கையால் இடித்து லேகியம் ஆக்கவும்.

இந்த லேகியத்தை அருநெல்லி அளவு காலை மற்றும் இரவு நன்றாக உமிழ் நீருடன் சப்பி சாப்பிட்டு சுடு தண்ணீர் குடிக்கவும்.

பயன்கள் : உடலில் தேங்கியுள்ள சகலவிதமான நீர்கட்டுகளும், சதைகளில் இறுகியுள்ள கொழுப்புகள், எலும்புகளில் தேங்கியுள்ள கொழுப்புகள், நுரையீரலில் தேங்கியுள்ள சளியும், கொழுப்பும் வெளியேறும். உடல் வற்றும்.

தேவையான கனம் குறைந்த உடன் மருந்தை நிறுத்தி விடவும்.
பத்தியம் : உருளைக் கிழங்கு, பூசணிக்காய், நீர்சத்தும், கொழுப்புசத்தை உருவாக்கும், ஐஸ், சோடா, வெளிநாட்டு குளிர்பானங்கள்,
எண்னெய் பலகாரம், புளிக்குழம்பு நீக்கவும்.

Comments

Popular posts from this blog

பால் பெருங்காயம்..

  பெருங்காயம் பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான...