Skip to main content

சீரணப் பொடி

 பகல் உணவில் (மதிய உணவு) இந்த சீரணப்பொடியை முதல் சாதத்துடன் ஒரு தேக்கரண்டி அளவு...


சுத்தமான பசு நெய்யுடன்
சேர்த்து பிசைந்து சாப்பிட வேண்டும்

பயன்கள் :
ஊழிக்கால நோய்கள் வராது ....
தொற்று நோய்கள் அணுகாது...

அசீரணம் வராது ...

நன்கு பசியெடுக்கும் ....

உண்ட உணவு சீரணிக்கும்.

செய்முறை :
சுக்கு சுத்தி செய்து தோல் நீக்கியது 100 கிராம்
பால் பெருங்காயம் 100 கிராம்
கறிவேப்பிலை 100 கிராம்
திப்பிலி. 50 கிராம்
நற்சீரகம். 50 கிராம்
இந்துப்பு. 50 கிராம்

இவை யாவற்றையும் எடைப்படி எடுத்து சூரிய ஒளி யில் காய வைத்து இடித்து பொடித்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .

இது தான் சீரணப் பொடி

Comments

Popular posts from this blog

பால் பெருங்காயம்..

  பெருங்காயம் பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான...