Skip to main content

கஸ்மீரா மூலிகை தைலம்

 *முடி சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு தரும் ரிஷிநேத்ரா கஸ்மீரா மூலிகை தைலம் தயாரிக்கும் முறை:*


*கஸ்மீரா மூலிகை தைலம்*

கடந்த 34 வருடங்களாக பலரின் முடி பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு வழங்கிய ஒரு மூலிகை தைலம், 100% தீர்வு வழங்கி பக்கவிளைவு இல்லாத ஓர் மூலிகை தைலம் 10 வயது முதல் 50 வயது வரை பயன்படுத்தலாம் இதனால் முதலில் முடி உதிர்வை நிறுத்தி முடியின் ஆணி வேறுக்கு பலம் கொடுக்கும்,பிறகு பொடுகை நீக்கி முடியின் வளர்ச்சியை தூண்டி நன்கு அடர்த்தியை கொடுக்கிறது , தலையில் உள்ள மண்டை சூடு உறுதியாக குறைந்து புதிய முடி வளரும் பொழுது இளநரை மறைந்து புது முடி கருமையாக வளர தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கிறது,அதே போல கடந்த 6 மாதங்களில் இழந்த முடியை உறுதியாக மீண்டும் முளைக்க வைக்கிறது இதில் கவனிக்க வைப்பது பரம்பரை வழுக்கை ஜீன் குறைபாடு ஒன்றும் செய்ய முடியாது 

*பயன்கள்:*

◆முடி உதிவை தடுக்கிறது

◆பொடுகை நீக்கி அடர்த்தி கொடுக்கிறது

◆இளநரைக்கு ஊட்டச்சத்து கொடுக்கிறது

◆முன் நெற்றி வழுக்கை விழாமல் தடுக்கிறது

◆முடி உடையாமல் பாதுகாக்கிறது


*தேவையான மூல பொருட்கள் :*


1.ஆவாரம்பூ - varampoo - 20g

2.செம்பருத்தி பூ - Hibiscus Flower - 20g

3.கருஞ்சீரகம் - lack jeera - 100g

4.வெந்தயம் - Fenugreek seeds - 100g

5.கற்றாழை - Aloevera - 100g

6.மாட்டு பால் - Cow milk - 100ml

7.தேங்காய் பால் - Coconut milk  - 50ml

8.நல்லஎண்ணெய் - Sesame oil - 1Litter

9.கிராம்பு - Cloves - 25g

10.ஓமம் - Omam - 25g

11.சின்ன வெங்காயம் - Onions - 25

12.பப்பாளி இலை - Papaya leaves - 5 இலை

13.வேம்பு இலை - Neem leaves - 50 இலை

14.கொக்கோ வெண்ணெய் - Cocoa butter - 25g

15.அவுரி - Nelli - 50g

16.திரிபலா பவுடர் - Tribala powder - 25g

17.மாங்காய் கசப்பு - Mango butter - 25g

18.கருவேப்பிலை - Curry leaves - 50 இலை

19.மருதாணி - Marudhani - 50 இலை

20.கரிசலாங்கண்ணி - Bringharaj - 50 இலை

21.வல்லாரை-Valarai - 50 இலை

22.ரோஜா நீர் - Rose extracts - 25ml

23.வெட்டிவேர் - Vettiver - 30g

24.திருநீற்று பச்சிலை - Thiruneer pathni - 30g

25.துளசி - Basil leaves - 50 இலை

26.மலைநெல்லிகாய் - 10


*செய்முறை:*


✍️நாம் தற்சமயம் 1 லிட்டர் ஆயில் தயார் செய்ய தேவையானதை செய்ய போகிறோம்

✍️கருஞ்சீரகம்,வெந்தயம்,கற்றாழை,கிராம்பு,ஓமம்,ஆகியவற்றை மாட்டுப்பால், தேங்காய் பால் கலந்து நன்கு அரைத்து பவுடர் செய்து கொள்ளவும்

✍️பிறகு மேலே கூறி உள்ள இலையாக உள்ளவை அனைத்தையும் ரோஜா நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும் 

✍️பிறகு நல்லஎண்ணெய் ஒரு வாணலியில் கொதிக்க வைக்கவும் அதில் இலையாக அரைத்த மூல பொருட்களை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் பிறகு 10 நிமிடங்கள் கொதித்த பிறகு பவுடராக அரைத்து வைத்த மூல பொருட்களை சேர்த்து 30 நிமிடம் வரை நன்கு கொதிக்க வைக்கவும்

✍️அதன்பின் சூடு ஆறிய பிறகு 3 நாட்கள் வரை நன்கு ஊற வைக்கவும்

✍️பிறகு வடிகட்டி நேரடியாக பயன்படுத்தலாம்


*பயன்படுத்தும் முறை:*

தினசரி இரவு முடியின் ஆணி வேரில் நககணுக்களை கொண்டு நன்கு மஜாஜ் செய்யுங்கள் காலை தலைக்கு குளிக்கவும், முக்கியமாக ஷாம்பூ பயன்படுத்த கூடாது மூலிகை சீகக்காய் அல்லது கற்றாழை ஷாம்பூ பயன்படுத்துங்கள்


முக்கிய குறிப்பு:

இதுவரை நீங்கள் பல நூறு எண்ணெய்களை பயன்படுத்தி இருக்கலாம்,ஆனால் இதை செய்து 3 மாதம் தவறாமல் தொடர்ந்து பயன்படுத்துங்கள் உறுதியாக மாற்றத்தை கண்கூடாக பார்க்கலாம்

தேவையற்ற விளம்பரங்களை நம்பி பல ஆயிரங்களை விரயம் செய்ய வேண்டாம் இது ஒரு பாரம்பரிய மருத்துவ வைத்திய முறை இதுவரை 1 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உலகம் முழுக்க பயன்படுத்தி உள்ளனர் 

Comments

Popular posts from this blog

பால் பெருங்காயம்..

  பெருங்காயம் பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான...