Skip to main content

நிலாவிரை மூலிகை

 ஆரோக்கிய வாழ்வை தரும்

நிலாவிரை மூலிகையின் மகத்துவம்

நிலாவிரை பொடியை ஆண் குட்டி ஈன்ற வெள்ளாட்டுப் பாலில் கலந்து சாப்பிட்டு வர விந்து உற்பத்தி அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் தாம்பத்திய சுகத்தில் நல்ல நிர்வாக திறன் கூடும்

நிலாவிரை பொடியுடன் நெல்லிக்காயை பொடி செய்து சமமாக கலந்து தினம் இருவேளை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர உடல் எரிவு நீங்கும் உடல் குளிர்ச்சி அடையும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நிலாவிரை பொடியுடன் நெல்லிக்காய் இலையை பொடி செய்து சமமாய் கலந்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்

நிலாவிரை பொடியை திராட்சைப் பழ ரசத்தில் கலந்துள்ள ரத்த உற்பத்தி அதிகரிக்கும்

நிலாவிரை இப்பொடியை வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ண விந்து கெட்டிப்படும் உடலுக்கு நல்ல சக்தி உண்டாகும் இதனால் உடல் சோர்வு நீங்கி ஆரோக்கியம் மேம்படும்

நிலாவிரை இப்பொடியை சுட வைத்த நல்லெண்ணெயில் கலந்துண்ண காணாக்கடி விஷம் தீரும்

ஒரு ஸ்பூன் நிலாவிரை சூரணத்துடன் தேன் கலந்து காலை மாலை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் பருத்த உடல் இளைக்கும் தேவையற்ற கொழுப்பு குறையும் ஊளை சதை வற்றும் வாத நோய்கள் தீரும் நீர்த்த விந்து கெட்டிப்படும் உடல் இறுகி வலிமை உண்டாகும்

இதே நிலாவிரை சூரணத்துடன் பசுநெய் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பெருத்து அழகாகும்

நிலாவிரை பொடியை பசும் வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டுவர திக்குவாய் குணமாகும்

நிலாவிரை பொடியை தயிருடன் கலந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள சிறு விஷங்கள் நீங்கும் உடல் அரிப்பு குணமாகும்

நிலாவிரை பொடியுடன் சம அளவு பனங் கற்கண்டு பொடியை கலந்து தினம் இருவேளை சாப்பிட்டு வந்தால் முதுமை நீங்கும் இளமை நீடிக்கும்

நிலாவிரை பொடியுடன் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து மத்தித்து இருபது நாட்கள் சாப்பிட்டு வந்தால் எலிகடி விஷம் சிறு பூச்சிகடி விஷம் நீங்கும்

மேலும்

நிலாவிரை பொடி பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வருவதால் முகத்திற்கு கலையும் மேனிக்கு அழகும் உண்டாகும்

நிலாவிரை இப்பொடியை நொச்சி இலை சாற்றில் குழைத்து சாப்பிட்டு வர வயிற்றுக் கடுப்பு குணமாகும்

நிலாவிரை சூரணத்தை பசும்பாலில் கலந்து ஒரு வாரம் காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புழுக்கள் நாக்குப்பூச்சிகள் இறந்து வெளியேறிவிடும்

பசு மோரில் நிலாவிரை சூரணத்தை ஒரு ஸ்பூன் அளவு கலந்து காலை மாலை பத்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் செரியாமை நோய் வெகுவிரைவாக குணமாகும்

பாகல் இலைச் சாற்றில் நிலாவிரை சூரணத்தை கலந்து சாப்பிட்டுவந்தால் செய்யான் கடி சிறு வண்டு விஷயங்கள் நீங்கிவிடும்

நிலாவிரை பொடியை சீனி சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டு வர பித்தம் தணியும் உடல் குளிர்ச்சியடையும்

எருமைப்பாலில் நிலாவரை சூரணத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள காணாக்கடி விஷங்களும் எளிதாக குணமாகும்

நிலாவிரை சூரணம் வல்லாரை சூரணம் இரண்டையும் சமமாக கலந்து தேனுடன் ஒரு மண்டல காலம் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் மூளை நரம்புகள் வலிமை பெற்று ஞாபக சக்தி உண்டாகும்

பள்ளி குழந்தைகளுக்கு இதை தருவதால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கி பசி உண்டாகும் சிந்தனைத் திறன் மேம்படும்

நிலாவிரை பொடியை மாதுளம்பழ சாற்றில் கலந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள கெட்ட நாற்றம் நீங்கும் சுகந்த மணம் வீசும்

நிலாவிரை சூரணத்துடன் திரிபலா கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும் வெகு மூத்திரம் தீரும்

நிலாவிரை சூரணத்துடன் திரிகடுகு கலந்து சாப்பிட்டு வந்தால் தீராத மலபந்தம் தீர்ந்து விடும்

நிலாவிரை சூரணத்துடன் ஆவாரை இலை சூரணத்தை சமமாக கலந்து சுடுநீரில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும் வெகுமூத்திரம் குணமாகும்

நிலாவிரை பொடியுடன் சம அளவு வசம்பு பொடியை சேர்த்து இதை வெண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லை நீங்கும் குடல் சார்ந்த நோய்கள் வராமல் நம்மை காக்கும்

நிலாவிரை சூரணத்தை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் மலபந்தம் தீரும் உண்ட உணவு எளிதாக சீரணமாகும் குடல் சார்ந்த வியாதிகள் அனைத்தும் விரைவில் விலகிவிடும்

நிலாவிரை பொடியுடன் சம அளவு கிராம்பு பொடியை கலந்து தினம் இரு வேளை சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும் மலச்சிக்கல் நீங்கும் குடல் புழுக்கள் ஒழியும்

மூல நோயால் அவதிப்படுபவர் மற்றும் அஜீரண கோளாறு உள்ளவர்கள் நிலாவிரை சூரணத்தை தொடர்ந்து சாப்பிட கூடாது

ஒரு வேளைக்கு நிலாவிரை பொடியை மூன்று கிராம் அளவு சாப்பிட்டால் போதுமானது

எந்த வகையிலாவது நிலாவிரை பொடியை சாப்பிட்டுவந்தால்

இதனால்

மேகம் பித்தம் வாந்தி வாய் நீருறல் மலக்கட்டு வாய்வு தொல்லை சொறி சிரங்கு மூல வாய்வு கண் எரிச்சல் கை கால் காந்தல் உடல் எரிவு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்
பொதுவாக மூலிகை மருத்துவத்தை கையாளும் பொழுது உணவில் புளியை நீக்கி மருந்து உண்டால் மூலிகை வைத்தியம் நல்ல பலனைத் தரும் மேலும் உடலுக்கு பல நன்மைகளை உண்டாக்கும்

நிலாவிரை மூலிகை மலச்சிக்கலை நீக்கி அதன் மூலமாக உடலுக்கு நோய் வருவதை தடுக்கும் ஆற்றலை பெற்றிருப்பதால் இதை அனைத்து நோய்களையும் நீக்கி ஆயுளை வளர்க்கும் கற்ப மூலிகையாக சித்தர்களால் கருதப்படுகின்றது

Comments

Popular posts from this blog

பால் பெருங்காயம்..

  பெருங்காயம் பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான...