..100 .. கிராம் அளவுக்கு ..
ஏதேனும் ஒரு நல்ல முறையில் செய்து எடுத்த அயச்செந்தூரம்,,
மண்டூரச் செந்தூரம்,,
இவைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே வகைக்கு,,
..50 .. கிராம் அளவுக்கு..
திப்பிலி,, மிளகு,, இவைகள்
இரண்டையும் தனித்தனியே அரைத்து வஸ்திரகாயம் செய்து எடுத்த தூள்கள் வகைக்கு
..50 .. கிராம் அளவுக்கு..
கடுக்காய் தோல் இடித்து வஸ்திரகாயம் செய்த தூள்,,
..100 .. கிராம் அளவுக்கு..
கடுகு ரோகினி இடித்து வஸ்திரகாயம் செய்த தூள்,,
..20 .. கிராம் அளவுக்கு ..
இந்துப்பு,, எவாச்சாரம்,,
வெடியுப்பு,, வெண்காரம்,,
இவைகள் நான்கும் வகைக்கு
..10 .. கிராம் அளவுக்கு..
பிரண்டை சாறு,, கரிசாலை சாறு,,
இவைகள் இரண்டும் வகைக்கு,,
..600 .. மில்லி அளவுக்கு
பனைவெல்லம்,,
..200 .. கிராம் அளவுக்கு..
எலுமிச்சம் பழச்சாறு,,
..100 ..மில்லி அளவுக்கு ..
செய்முறை ::
ஒரு இரும்பு வாணலியை அடுப்பில் ஏற்றி இதில் பனைவெல்லத்தை பொடித்து போட்டு அதில் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி பாகுபோல்
கிண்டி இதில் செந்தூரங்கள்
இரண்டையும் போட்டு நன்றாக கலந்து பிறகு இதில் இரண்டு
வகையான சாறுகளையும் ஊற்றி அடுத்து உப்பு வகைகளை போட்டு நன்றாக கலக்கிக் கொண்டு பிறகு மேற்படி சூரணங்களை ஒன்றுபட கலந்து எடுத்து இந்த கலவையில் போட்டு நன்றாக கலந்து இளகம் பதத்தில் இறக்கி ஆறவைத்து எடுத்துக் கொள்ளவும்..!!
மருந்து அளவு ::
தினமும் இரண்டு வேளை
சுண்டைக்காய் அளவு வெந்நீரில் எடுத்துக் கொள்ளவும் ..
தீரும் நோய்கள் ::
விடபாகம் .. பாண்டு .. வீக்கம்..
காமாலை .. அனல்மந்தம் ..
முதலிய நோய்கள் குணமாகும்..
Comments
Post a Comment