Skip to main content

வெற்றிலை மஞ்சள் திரியும் கரோனா சிகிச்சையும்.

 வெற்றிலை மஞ்சள் திரியும் கரோனா சிகிச்சையும்.


வெற்றிலையும் மஞ்சளும் தமிழர் வாழ்வோடு கலந்த பொருள்கள், இவை இரண்டும் இல்லாமல் எந்த ஒரு மங்கள நிகழ்வும் இல்லை.பச்சை தங்கமென அழைக்க படும் வெற்றிலையும், மஞ்சளும் நம் வாழ்வோடு ஒட்டி கொள்ள அவற்றின் நோய் தடுப்பு செயலும் முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.

கரோனா நோய் தொற்றில் இவ்விரண்டுக்கும் முக்கிய இடம் உண்டு.

காரோனா நோயில் வரும் இறப்பு மற்றும் பாதிப்புகளுக்கு Cytokine storm தான் முக்கிய காரணம்.
ஏராளமான மக்கள் கூடி இருக்கும் பொது இடத்தில் மாட்டி கொள்ளும் திருடனை அடிக்க அங்கு இருக்கும் அத்தனை பேரும் முண்டியடிக்கும் போது திருடனை தவிர்த்து மேலும் சிலருக்கு காயம் ஏற்படும் இல்லையா அது போல தான் cytokine storm மும், வைரஸை அழிக்க நம் நோய் எதிர்ப்பு அணுக்கள் ஏராளமான அளவில் பெருகும் போது அவை வைரஸை மட்டும் கொல்லாமல் நம் உடலில் உள்ள உறுப்புகளையும் தாக்கி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இப்படி பாதிப்பை ஏற்படுத்தும் Cytokine storm யை குறைக்கும் தன்மை கொண்டது தான் வெற்றிலையும் மஞ்சளும்.

போர் முனையில் சண்டையிடும் முன் கள வீரர்கள் தங்கள் உதவிக்கு தகவல்களை அனுப்பி மேலும் அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை அனுப்ப கேட்பார்கள், சண்டையும் தீவிரமடையும், இப்படி தொடர்ந்து சண்டையிட்டு கொண்டே இருந்தால் இருபக்கமும் அழிவு ஏற்படும் என்பதால் யாராவது ஒருவர் சமாதானம் செய்வார்கள் இல்லையா ,

அது போல நம் உடலில் வைரஸ் கிருமி நுழைந்த உடனே தாக்கும் முன் கள வீரர்கள் வெள்ளை அணுக்கள் தான், அவை அனுப்பும் தகவல்கள் IL 6 ,TNF alpha, IL beta போன்றவை எல்லாம்(Pro inflammatory cytokines) சக்தி வாய்ந்த ஆயுதம் என்றால் cox 1 and cox2 மூலம் நடக்கும் inflammation,
சண்டையை தடுக்கும் சமாதான தூதர் IL 10 (anti inflammatory cytokine). இம்மூன்றையும் கட்டுக்குள் வைத்தால் cytokine storm ஏற்பட வாய்ப்பு மிக குறைவு.

மஞ்சளில் உள்ள curcumin சத்து

1. IL 6 போன்ற pro inflammatory cytokine களின் செயலை கட்டுக்குள் வைக்கும்,
2. Cox 1 மற்றும் Cox 2 செயலை தடுக்கும்
3. IL 10 செயலை ஊக்குவிக்கும்
ஒரே ஒரு மருந்து தான்,ஆனால் அது மூன்று நிலைகளில் செயல் புரியும்.
தவிர மஞ்சளுக்கு வைரஸ் சுவற்றை சிதைக்கும் தன்மையும், அவை நம் செல்களுடன் ஒட்டி கொள்வதை தடுக்கும் ஆற்றலும் உண்டு.

வெற்றிலையில் உள்ள Hydroxychavicol சத்தும் COX ஊக்கியின் செயலை தடுக்கும்.
வெற்றிலையும் மஞ்சளும் cytokine storm யை தடுக்கும் இரட்டை குழல் துப்பாக்கிகள்.

மேலும் மூக்கின் வழியாக புகை பிடிக்கும் முறை என்பதால் மருந்தின் செயலும் உடனடியாக கிடைக்கும்.
மஞ்சள் வெற்றிலை குறித்து மேலும் மேலும் பேசி கொண்டே போகலாம்.

Comments

Popular posts from this blog

பால் பெருங்காயம்..

  பெருங்காயம் பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது பெர்சியாவை (ஈரான்) பிறப்பிடமாகக் கொண்டது. ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இச்செடியின் காம்பினுள், கெட்டியான அதிக உவர்ப்பு சுவை மனமுள்ள பால் இருக்கும். அழகான மஞ்சள் நிறமுள்ள மலர் களைக் கொண்டது. செடியின் பாலிருந்துதான் பெருங்காயம் கிடைக்கிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். இதில், பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக் கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் சமைத்த உணவுகளில் மென்மையான...